கயவர்களின் செயலால் உயிரை மாய்த்துக்கொண்ட தமிழ் சிறுமி; பெரும் சோக சம்பவம்!

220shares

மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது,

சம்பவம் தொடர்பில் மேலும்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அந்த மாணவி தனது வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய பெற்றோர் வெளியே சென்று இருந்தனர்.

அப்போது கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் வீட்டுக்குள் திடீரென புகுந்தனர். அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார்.

ஆனாலும் மாணவியை விடாமல் 4 பேரும் துரத்தி சென்றனர். ஒரு காட்டுப்பகுதியில் நுழைந்த அந்த மாணவியை 4 பேரும் பிடித்து கீழே தள்ளி, அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளனர். 4 பேரின் கோரப்பிடியில் இருந்து மீண்டும் தப்பித்த அந்த மாணவி தனது வீட்டுக்கு வந்து மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க