நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது? ரகசியம் உடைத்த சீமான்! (வீடியோ)

531shares

எங்கள் மண்ணுக்கான, மக்களுக்கான தமிழ்த்தேசிய அரசியலை நாங்கள் முன்னெடுக்கிறோம். இந்த பாதையில் எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ள தயார். காரணம், நாங்கள் புலித்தலைவர் பிரபாகரன் வழிவந்தவர்கள் என கூறி தமிழகத்தின் வீதிகள் தோறும் தமிழ்த்தேசிய கருத்தாக்கத்தினை பேசிவருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

எதிர்வரும் மக்களவை தேர்தலுக்காக 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது தமிழர் கட்சி. தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பிரச்சார களத்தில் மூர்க்கமாக இயங்கிக்கொண்டிருக்கும் சீமானிடத்தில் நமது ஐபிசி தமிழ் நேர்காணலுக்காக சில கேள்விகளை முன் வைத்தோம். அப்போது அவர் அளித்த பதில்களாவன, "இப்போது தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் விவசாயிகளை, ஏழை - எளியோர்களை அவர்களின் துயரங்களிலிருருந்து மேலேற்றுவோம் என்கிறார்கள். ஆனால், இத்தனை ஆண்டுகாலம் இவர்கள் ஆட்சியிலிருந்த சமயத்தில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்?" என கேள்வியெழுப்பினார்.

மேலும், நாங்கள் புலம்பெயர் தேசத்திலுள்ள எங்கள் பிள்ளைகளிடம் இருந்து உதவி பெற்றே கட்சி பணிகளை மேற்கொள்கிறோம். ஆனால், எங்கள் மீது திட்டமிட்டே அவதூறு பரப்புகிறார்கள். தேர்தல் காலத்தில் வேண்டுமானால் எங்கள் வீடுகளில் சோதனையிட்டு பார்க்கலாமே எனவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க