ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியான இளைஞன்: டிக் டொக் வீடியோவால் எற்பட்ட விபரீதம்!

  • Jesi
  • April 16, 2019
37shares

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பிரபல்யமான டிக் டொக் செயலி மூலம் இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியா டில்லியில் நடந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

டில்லியை சேர்ந்த சல்மான்(19) என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து படத்தில் வரும் துப்பாக்கி சுடுதல் காட்சியை போலவே காட்சியை நடித்து அதனை வீடியோவாக எடுத்து டிக் டொக்கில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சல்மான் கன்னத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சல்மான் சம்பவ இடத்திலேயே பலியானார். டிக் டொக்கால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை முழுமையாக தற்போது டிக் டொக் வீடியோக்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன.

சில அடாவடிகள் அரைகுறையாக ஆடை அணிந்து டிக்டொக்கில் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஒரு சில பேர் படத்தில் வரும் தற்கொலை காட்சிகளை போன்று செய்து காட்டும்போது உயிரையும் விடுகின்றனர். இதனால் நீதிமன்றம் டிக் டொக்குக்கு தடையும் விதித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க