சர்கார் திரைப்பட பாணியில் தமிழகத்தில் நடந்த சம்பவம்!

37shares

தேர்தலில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் திரைப்பட பாணியில் பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும்,

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘சர்கார்’ படத்தில் கூறப்பட்ட 49-பி என்ற சட்டப்படி நமது ஓட்டை இன்னொருவர் போட்டுவிட்டாலும் கூட 17 பி படிவம் மூலம் நாம் நமது வாக்கை அளிக்கலாம். இந்த பட காட்சிகளையும் வசனங்களையும் பயன்படுத்தி தேர்தல் ஆணையம் விளம்பரங்கள் வெளியிட்டது.

இது தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எதிரொலித்தது. கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் சினிமா பாணியில் நேற்று பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.

சென்னை, தாம்பரத்தை அடுத்த முடிச்சூரைச் சேர்ந்தவர், கோபிநாத், தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர். நேற்று காலை 11 மணிக்கு, முடிச்சூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, ஓட்டளிக்க வந்தார். அவரது ஓட்டு, ஏற்கனவே, பதிவானதாக, ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த கோபிநாத், ஓட்டுச்சாவடி ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தனக்கு, டெண்டர் ஓட்டு எனப்படும், ஆய்விற்குரிய ஓட்டு பதிய அனுமதிக்குமாறு, ஓட்டுச்சாவடி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து சர்கார் பட பாணியில், ‘49 பி’ விதியின்படி, ‘17 பி’ படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டு, ‘17 ஏ’ படிவத்தில், அவரது ஓட்டை, கோபி நாத் பதிவு செய்தார்.

இதேபோல், முடிச்சூரைச் சேர்ந்த, ராஜாஜி என்பவரின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவானது. அவருக்கும், ‘49 பி’ விதியின் கீழ் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க