திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு சென்றவர் வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்!

7shares

மீஞ்சூர் அடுத்த ஹேமசந்திரா நகரைச் சேர்ந்த நகை கடை நடத்திவரும் கமல் என்பவரது வீட்டில் 60 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :-

நகை கடை நடத்திவரும் கமல் கடந்த 17 ஆம் திகதி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 60 பவுண் நகை, ரூ. 15 ஆயிரம், ¼ கிலோ வெள்ளி திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கமல் மீஞ்சூர் போலீசில் புகார் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இப்பகுதியில் அடிக்கடி கொள்ளைபோவது குறித்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க