வீதியின் குறுக்கே புகையிரதத்தை நிறுத்திவிட்டு சென்ற ஓட்டுநர்; இப்படியும் செய்வார்களா?!

170shares
Image

“கூடுதலாக 15 நிமிடம் வேலை பார்த்து விட்டேன்” எனக்கூறி புகையிரதத்தை பாதியில் நிறுத்திய புகையிரத செலுத்துனரால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது

குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும்,

நாகை மாவட்டம் நெய்வேலியில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு தினமும் சரக்கு ரெயில்கள் நிலக்கரி ஏற்றி அதிகளவில் செல்லும். ஆனால் இந்த ரெயில்கள் எந்த ரெயில் நிலையத்திலும் நின்று செல்லாது.

இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனால் வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலைய மாஸ்டர் அந்த ரெயில் தடையின்றி செல்ல சிக்னலை மாற்றி விட்டு ரெயில் நிலையத்தை கடந்து செல்ல காத்திருந்தார்.

ஆனால் அந்த ரெயில் எந்த முன்னறிவிப்புமின்றி வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்டேசன் மாஸ்டர் உடனடியாக சரக்கு ரெயிலை இயக்கி வந்த என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் சென்று ‘எதனால் ரெயிலை நிறுத்தினீர்கள்’ என்று கேட்டார்.

அப்போது அவர் “எனக்கு 12 மணிநேரம் மட்டுமே பணி. ஆனால் கூடுதலாக 15 நிமிடம் ரெயிலை இயக்கி வந்துள்ளேன். இதனால் மேற்கொண்டு என்னால் ரெயிலை இயக்க முடியாது” என்று கூறியதால் ஸ்டேசன் மாஸ்டர் அதிர்ச்சியடைந்தார்.

இந்த சரக்கு ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் அங்கு புறப்பட தயாராக இருந்த திருப்பதி-காரைக்கால் ரெயிலும் இயக்க தாமதமானது. மேலும் அதிக பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சுமார் 100 மீட்டர் வரை பெட்டிகளுடன் நின்றதால் வைத்தீஸ்வரன்கோவில்-புங்கனூர் ரெயில்வே கேட்டை கடந்தும் பெட்டிகள் நின்றிருந்தது. இதனால் அந்த வழியே கடந்து செல்ல முடியாமல் மினிபஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க