பொய் சொல்லி பணம் வசூலிக்க முயன்ற நபரை நடுவீதியில் வைத்து புரட்டி எடுத்த பெண்! (காணொளி)

100shares

ஜார்கண்டில் பெண் ஒருவரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவரை குறித்த பெண் நடுரோட்டில் வைத்து சரமாரியாக அடிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

ராஹிவர்மா என்பவரது வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என கூறி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சென்றுள்ளார். வீட்டில் இருந்த பெண்ணிடம் உங்கள் கணவர் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் அதை மறைக்க ஐம்பதாயிரம் ரூபா தரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் சுதாகரித்துக்கொண்ட பெண் தனது தோழிகளின் உதவியுடன் அவர் போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியென தெரிந்துகொண்டு போலிஸிற்கு தகவல் வழங்கியதுடன் போலிஸார் முன்னிலையிலே நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

குறிந்த நபரை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது...

இதையும் தவறாமல் படிங்க