இந்தியாவின் புதிய செக்மேற்! விடுதலைப்புலிகளின் தடை குறித்து கேணல் ஹரிகரன்!!

669shares

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட பின்னர் இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் மற்றும் ரி. என் கோபாலன் போன்ற பாதுகாப்பு ஆய்வாளர்கள் இது குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

விடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இந்தத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத்தரப்பில் அறிக்கை யிடப்படுகிறது.

எனினும் இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் கேணல் ஹரிஹரனின் பார்வையில் சீமானின் நாம் தமிழர்கட்சி மற்றும் திருமுருகன் காந்தியின் மே 18 ஆகிய இயக்கங்களுக்கு செக்மேற் பாணி இலக்குவைத்தே இந்த தடை நகர்வை இந்திய அரசாங்கம் செய்ததாகவும் கூறுகிறார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் 10 ஆம் ஆண்டு நிறைவுவரும் நிலையில் அதன் பின்னணியில் குறித்த இரண்டு அமைப்புக்களும் தனி ஈழம் குறித்த சுலோகங்களை மீண்டும் தீவிரப்படுத்தும் என்பதால் இப்போது இந்த தடை அறிவிக்கபட்டுள்ளதாகவும் ஹரிகரன் கூறுகிறார்.

இதனடிப்படையிலேயே தமிழகத்தில் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருவது இந்தியாவின் பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் என்ற காரணத்துடன் தடைநீடிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதேபோல இன்னொரு ஆய்வாளரான ரி. என் கோபாலன் தெரிவித்துள்ள கருத்தில் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் இல்லை என்பது இந்தியாவுக்கு மிகத்தெளிவாகத்தெரிந்தாலும் தமிழகத்தை மையப்படுத்தியே இந்தப்புதிய தடையை கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்