தமிழக அரசியல் திருப்பங்கள்! கமல் -சீமான்- தினகரன்

612shares

இந்திய பொதுத் தேர்தல் மற்றும் தமிழக இடைத்தேர்தல் முடிவுகளில் சில அதிரடி திருப்பங்கள் அவதானிக்கபட்டன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக, பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு இப்போது பெரும் அடி விழுந்துள்ளது. அதற்கு எதிர்புறமாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பல தொகுதிகளில் திமுக அதிமுகவுக்குரிய மாற்று சக்தியாக மாறியுள்ளது. சென்னையின் 3 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அந்த இடத்தை பிடிக்கும் சக்தியாக கமல்ஹாசன் உருவெடுத்துள்ளார்.

இதேபோல சீமானின் நாம்தமிழர் கட்சியும் இன்னொரு முக்கிய சக்தியாக அவதானிக்கபட்டுள்ளது. பாமகவின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் கணிசமாக சரிந்து போயுள்ளது.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக தலித் தலைவர்களான திருமாவளவன் முன்னணியில் இருக்க கிருஷ்ணசாமி பின்னடைவை சந்தித்தார்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக முழங்கினாலும் தமிழக வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர். தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்விடைந்துள்ளது

அதாவது இந்தியாவில் பா. ஜ. க அலை அடித்தாலும் தமிழகத்தில் மட்டும் அதன் பாரம்பரிய பா. ஜ. க (மதவாத )எதிர்ப்பு என்ற மரபணு இன்னும் இருப்பதை முடிவுகள் ஆதாரப்படுத்தியுள்ளன

திருச்சி தொகுதியில் பெரிய பெரிய கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் சவால் விடும்வகையில் வாக்குவங்கியை உயர்த்தியது.

சிவகங்கை தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஹெச் ராஜா கொங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார்.

அதேபோல கன்னியாகுமரி தொகுதியில் கொங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணனை விட 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்கே சுதீஷ் சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!