பெண்ணுக்கு திருமணம்: மகளுக்கு ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை; காரணம் இதுதான்!

506shares

காதல் திருமணம் செய்த மகளுக்கு அவரது தந்தை கண்ணீர் அஞ்சலி பனரை வைத்த சம்பவம் அப்பகுதியெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும்,

தமிழகம் ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவரது 21 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த மணி (எ) சுப்பிரமணியம் என்ற இளைஞனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது.

மகளின் மீது அதிகளவில் பாசம் வைத்திருந்த சரவணன், தனது மகள் சொல்பேச்சை கேட்காமல் வேற்று சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்தார்

இதனால் ஆத்திரமடைந்த சரவணன் தனது மகள் நேற்று மதியம் இறந்துவிட்டதாகவும், அவளது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது என வாசகம் எழுதப்பட்ட கண்ணீர் அஞ்சலி பனரை அப்பகுதியெங்கும் வைத்துள்ளார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி