படைப்புலகின் கண்ணீர் மத்தியில் தீயில் சங்கமித்தார் கிரேசி மோகன்!

  • Shan
  • June 11, 2019
57shares

தமிழ்ச் சினிமாவிலுள்ள மதிப்பு மிகுந்த படைப்பாளிகளுள் ஒருவரான கிரேசி மோகன் நேற்றைய தினம் உடல்நலக்குறைவால் மரணமானார்.

இவரது மரணம் சினிமா மட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய தினம் பலரின் கண்ணீரின் மத்தியில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

கிரேசி மோகன் தனது நாசூக்கான திரைக்கதை வசனங்களால் பல்லாயிரம் தமிழ்த் திரையுலக இரசிகர்கள் மத்தியில் ஆழப்பதிந்துள்ளார்.

அவரது பிரிவு தமிழ் சினிமாவின் தரமான வசன கர்த்தாக்களிடையே ஒரு வெறுமையைத் தோற்றுவித்துள்ளது என்றுதான் சொல்லமுடியும்.

இவரது இறுதிக் கிரியை தொடர்பான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க