கடும் வெப்பத்தால் ரெயிலில் பயணித்த 4 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

410shares

ரெயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 4 தமிழர்கள் கடும் வெப்பத்தால் மரணம் அடைந்ததாக தகவல் வெளி யாகி துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்

இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பருவமழை தொடங்கிய போதிலும் குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்கண்ட் பகுதியில் வரலாறு காணாத அளவு 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 68 பேர் அடங்கிய குழு வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு சுற்றுலா சென்றி ருந்தனர். அவர்கள் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டி யில் கோவைக்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெப்பம் காரணமாக ஜான்சி அருகே அவர் களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல், பச்சையா (வயது 80), பாலகிருஷ்ணா (வயது 67), தனலட்சுமி (வயது 74), தெய்வானை (வயது 71) ஆகிய 4 பேர் பலியாகினர்.

மேலும் சுப்பாரய்யா (வயது 71) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க