2 வயது குழந்தையை காப்பாற்ற 110 மணி நேரம் பலர் சேர்ந்து தீவிர போராட்டம்; இறுதியில் உயிரிழந்த சோகம்!

122shares
Image

ஆழ்துளை கிணற்றில் இருந்து 110 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும்,

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம், பகவான்புரம் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை, அங்கிருந்த துணியால் மூடப்பட்டு கிடந்த அந்த ஆழ்துளை கிணற்றின் மீது குழந்தை கால் வைத்தபோது உள்ளே விழுந்துவிட்டான்.

தஅருகில் நின்றிருந்த குழந்தையின் தாய் ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 110 மணி நேரம் கடுமையாக முயற்சி செய்த நிலையில், இன்று காலையில் குழந்தையை மீட்டனர்.

அப்போது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க