தாயையும் பிள்ளையையும் காப்பாற்றி ஒரே நாளில் ஹீரோவான சிறுவனுக்கு வீர தீரத்துக்கான விருது?

189shares

வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்ற நிலையில் ஒரே நாளில் இந்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

குறித்த சம்பவம் அஸ்ஸாமில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

சோனித்பூரில் உள்ள உத்தம் டாடி என்ற இடத்தில் மிஸ்ஸாமரியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஆனந்த் நேற்று முன்தினம் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் இரு குழந்தைகளுடன் ஆற்றைக் கடக்க முயன்றதையும், திடீரென நீர்வரத்து அதிகரித்து ஏற்பட்ட வெள்ளத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டதையும் அச்சிறுவன் கண்டார்.

சற்றும் தாமதிக்காமல் வெள்ளத்தில் குதித்து நீந்திச் சென்று தாயையும், குழந்தையையும் மீட்டார். ஆனால் மூன்றரை வயது குழந்தையான தீபிகாவை மட்டும் மீட்க முடியாமல் போனதால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தன் உயிரைப் பொருட்படுத்தாது வெள்ளத்தில் குதித்து பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் சிறுவனின் தைரியத்தை கேள்விப்பட்ட மாவட்ட நீதிபதி லக்கியா ஜோதி தாஸ், சிறுவனை பாராட்டியதுடன், வீர தீரத்துக்கான விருதுக்கு சிறுவன் உத்தம் டடியின் பெயரை பரிந்துரைத்து உள்ளேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க