அதிகாலையில் தமிழ் இளைஞனை வீடு புகுந்து வெட்டிக்கொன்ற கும்பல்; தற்போது தொடரும் பதற்றம்!

1510shares

இளைஞரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பரபரப்பு சம்பவம் தமிழகம் மதுரை மாவட்டத்தில் இன்று (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. இவர், சுண்ணாம்பு பவுடர் ஆலை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை நிருபன் சக்கரவர்த்தி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீடு புகுந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றது.

அவரது இரு கைகளும் மணிக்கட்டுகளோடு துண்டாக்கப்பட்டன. தடுக்க வந்த அவரது மனைவி பிரேமாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற பொலிசார், நிருபன் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு தற்போது வரை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க