பிரான்ஸ் புறப்பட தயாரான விமானத்திலிருந்து உடமைகளுடன் இறக்கிவிடப்பட்ட பயணிகள் பரிதவிப்பு!

127shares

டெல்லியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறப்பட தயாரான ஏர் ஃபிரான்ஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை காரணம் காட்டி 26 பயணிகள் இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

26 பயணிகளும் விமானத்தில் இருந்து இறங்குமாறும் அவர்களது உடைமைகளும் இறக்கப்படும் என்றும் விமானக் குழுவினர் வலியுறுத்திய வீடியோவும் வெளியாகியிருந்தது.

ஆனால் இறக்கி விடப்பட்ட பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல் ஏதும் இதுவரை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்ப கோளாறை காரணம் காட்டிய விமானிகள் என்ன பிரச்சனை என்பதை தெரிவிக்காததால் பயணிகள் அதிர்ப்தியடைந்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க