இந்தியாவின் முக்கிய நிலைகளை தாக்கி அழித்து விடுங்கள் !! பயங்கரவாதிகளுக்கு அல்கொய்தா உத்தரவு

22shares

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாக இருக்கும் அய்மன் அல் ஜவகரி இந்தியாவை மிரட்டும் வகையில் ஒரு அறிவிப்பை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளான்.

அந்த வீடியோவில் அவன் கூறி இருப்பதாவது,இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட வேண்டும்.

இந்திய பொருளாதாரம் சீர்குலைந்தால்தான் இந்தியாவையும், இந்திய மக்களையும் பாதிக்க செய்ய முடியும்.இதற்கு காஷ்மீரில் உள்ள போராளிகள் இடைவிடாமல் தாக்குதல் நடத்த வேண்டும்.

இந்தியாவின் முக்கிய நிலைகளை தாக்கி அழித்து பெரிய சேதத்தை ஏற்படுத்துங்கள்.

இந்தியாவின் மனித சக்தியையும், உட்கட்டமைப்புகளையும் உடைக்கும் வகையில் போர் நடத்தப்பட வேண்டும்.

இந்தியாவுக்கு தாங்க முடியாத சேதத்தை ஏற்படுத்த வேண்டும். இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து அந்த நாட்டை வறுமைக்குள் தள்ள வேண்டும்.

இதற்காக நீங்கள் பாகிஸ்தான் நாட்டையும் நம்பாதீர்கள். பாகிஸ்தான் நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களது சுய அரசியல் லாபத்துக்காக உங்களை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடாதீர்கள்.”இவ்வாறு அல்கொய்தா தலைவன் அய்மன் கூறி உள்ளான்.அவன் பேசிய வீடியோ அசப் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க