வீடு புகுந்து 6 வயது மகன் கண்முன்னே தமிழர் கழுத்தறுத்து கொலை: மர்ம கும்பலின் வெறிச்செயல்; குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!

872shares

6 வயது சிறுவன் கண்முன்னே தந்தை கழுத்தறுத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அதிர்ச்சி சம்பவம் தமிழகம் ராமநாதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

ராமநாதபுரம் மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்ற நபர் நேற்று மாலை தனது நண்பர்கள் சிலருடன் கீழக்கரை கடற்கரையோரம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது மனைவி வீட்டில் இல்லாததோடு அவரது 6 வயது மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளாரர்.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் சிறுவன் கண்முன்னே அவனது தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிசார் அங்கு விரைந்து வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்போது வரை அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க