இரண்டு வயது மகனை தூக்கிலிட்டு கொலை செய்த தாய்; அதிர்ச்சியளிக்கும் காரணம்!

444shares

இரண்டு வயது மகனை தூக்கிலிட்டு கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகம் அரியலூர் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக இடம்பெறுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும்,

அரியலூர் புதுமார்க்கெட் தெருவைச் சேர்ந்த மனைவியை இழந்த ஜெயக்குமாரும் கணவரை இழந்த ஸ்மிதாவும் முறைப்படி மறுமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு ரித்தீஷ் என்ற 2 வயது மகன் இருந்தான். நேற்று உறவினர் வீட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த ஸ்மிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து மகனை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க