பெற்றோரால் வேண்டாம் என்று பெயர்வைக்கப்பட்ட தமிழ் குழந்தையை வேண்டும் என்று அழைத்த வெளிநாட்டு நிறுவனம்!

1421shares

பெண் குழந்தை பிறக்க கூடாது என வேண்டிக் கொண்டு, பெற்றோரால் வேண்டாம் என பெயர் சூட்டப்பட்ட மாணவி, கேலி கிண்டல்களுக்கு மத்தியில் கல்வியால் உயர்ந்து சாதனை படைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

திருத்தணியை நாராயணபுர கிராமத்தில் ஒரு வழக்கம் இருக்கின்றது, பெண் குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால் அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும் என ஒரு நம்பிக்கை இருக்கிறது.

அதுபோல் அசோகன் எனும் நபருக்கு தொடர்ந்து இரண்டு பெண் குழந்தைகள் பிறக்க, இரண்டாவது குழந்தைக்கு வேண்டாம் என பெயர் சூட்டியுள்ளார்.

இந்நிலையில் வேண்டாம் என்ற பெண் சக மாணவர்களின் கிண்டலுக்கு மத்தியிலும் கடுமையாக பொறியியல் படிப்பை படித்துவந்த வேண்டாம் என்ற பெண் கல்லூரியில் நடந்த பல்கலைக்கழக நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்றுள்ள நிலையில், வருடத்திற்கு 22 லட்ஷம் சம்பளத்தில் வேண்டுமென்று வேலைக்கு சேர்ந்துள்ளது ஜப்பான் நிறுவனம்.

இதன் மூலம் வேண்டாம் என்றவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் வேண்டாம்.

இதையும் தவறாமல் படிங்க