கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி? மௌனம் கலைத்தார் கணவர் போனிகபூர்

2144shares

டுபாய் ஹோட்டலில் உள்ள குளியல் தொட்டியில் நடிகை ஸ்ரீதேவி நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டதாக கேரள டிஜிபி ரிஷிராஜ்சிங் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் ஸ்ரீதேவியின் கணவரும், அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் மௌனம் கலைத்துள்ளார்.

இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற கதைகளுக்கு தான் பதில் அளிக்க விரும்பவில்லை என்றும் இது போன்ற கதைகள் தொடர்ந்து கூறப்பட்டு வருவதாகவும் இவை அவர்களின் கற்பனையின் வெளிப்பாடு என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் போனிகபூர் தயாரித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் வெளியீட்டு உரிமையை குறைந்த விலைக்கு கைப்பற்றுவதற்காக, முக்கிய சினிமா வினியோகஸ்தர்கள் சிலர் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டு படத்தை மற்ற நிறுவனங்களை வாங்க விடாமல் தடுத்து வரும் நிலையில் மனைவி ஸ்ரீதேவி கொல்லப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையால் போனிகபூர் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது

இதையும் தவறாமல் படிங்க