கோர விபத்தில் சிக்கி பிரபல நடிகை மரணம்!

1217shares

கர்நாடக மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை சோபா விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த ஜுலை 17ம் திகதி தனது 2 குழந்தைகள் மற்றும் 7 பேருடன் பனஷங்கரி கோவிலுக்கு காரில் சென்றிருக்கிறார்.

அவர் சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த பாரவூர்தி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவருடன் காரில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரில் மீதமுள்ள 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க