உலகத் தமிழருக்கோர் உறவுப் பாலமாக செயற்படும் ஐ.பி.சி தமிழின் இந்திய கலையகம் இன்று தமிழகத்தில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.சி தமிழின் கலையகங்கள் தமிழ் மக்கள் பரவி வாழும் நாடுகளின் விஸ்தரிக்கப்பட்டுவரும் நிலையில் அதன் ஒருபகுதியாக இந்தியாவில் கலையகம் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
46 வீரப்பாநகர் ஆழ்வார்திருநகர் வலசரவாக்கம் சென்னை 87 எனும் முகவரியில் ஐ.பி.சி தமிழின் இந்திய கலையகம் அமைந்துள்ளதுடன், திறப்பு விழாவில் பலர் கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.