காஷ்மீர் குறித்து விஜய் சேதுபதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜொமேட்டோ

31shares

நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 72 பேர் உயிரிழந்துள்ளனர். வயநாட்டில் நிலச்சரிவில் புதையுண்ட 59 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தில் தத்தளித்த இரு பெண் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கி லேயே இடுப்பளவு தண்ணீரில், தோளில் சுமந்தபடி வந்ததாக காவலர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தைச் சாராதவர் கொண்டு வரும் உணவை வாங்க மாட்டேன் என வாடிக்கையாளர் ஒருவர் செய்த பிரச்சனைக்குப் பிறகு ஜொமேட்டோ தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பக்ரீத் பண்டிகை வியாபாரத்துக்காக துணிகளை வாங்கிவந்த வியாபாரி ஒருவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதை இலவசமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற செய்திகளோடு இன்றைய செய்தித் துளிகள் அமைகினறது.

இதையும் தவறாமல் படிங்க