செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்!

674shares

தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும்போது பின்புலத்தில் மழை பெய்வது போல, பனி பொழிவது போல காட்டுவார்கள். அது அந்த சூழலை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள உதவும்.

தற்போது அந்த நிலையெல்லாம் கடந்து கிராபிக்ஸ் காட்சிகள் உதவியால் நீரில் மூழ்கியபடியெல்லாம் செய்தி வாசிக்க தொடங்கிவிட்டனர். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து பல கிராமங்கள், நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த வெள்ள நிலவரங்கள் குறித்து கன்னடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் செய்தி வாசிக்கிறார். அவர் மழை வெள்ளத்தில் மூழ்கி கொண்டே செய்தி வாசிப்பது போல கிராபிக்ஸில் தயார் செய்திருக்கிறார்கள். அப்படியே செய்தி வாசித்துக் கொண்டிருந்தவர் அதில் முழுவதும் மூழ்குவது போலவும் காட்டியிருக்கிறார்கள்.

இது தற்போது டுவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. பலர் இதை பார்த்து வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர். சிலர் “மக்கள் வெள்ளத்தில் பாதிகப்பட்டிருக்கும்போது இப்படி கேவலமாக ஊடகங்கள் நடந்து கொள்கின்றன” என விமர்சித்துள்ளார்கள்.

அதில் பதிலளித்திருந்த ஒருவர் “இவர்களிடம் கிராபிக்ஸ் செய்யவாவது பணம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானில்..” என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை பதிந்துள்ளார்.

அதில் ஒரு செய்தி வாசிப்பவர் கிராபிக் காட்சிகள் எதுவுமில்லாமல் உண்மையான வெள்ளப்பகுதிக்கே சென்று அதில் மூழ்கியபடி செய்தி வாசித்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோக்கள் டுவிட்டரில் வைரலாக பரவி கொண்டிருக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்