தடல்புடலாக நடந்த திருமண ஏற்பாடுகள்; தமிழ் மாணவியின் விபரீத முடிவால் பெரும் சோகத்தில் கிராமம்!

724shares

வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

சிறு மங்கலம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் பெரியம்மாள் தம்பதியரின் மகள் சரண்யா 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சரண்யா வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்ததாகவும்,உடனடியாக அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள் சரண்யாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

சரண்யாவிற்கு திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்ததாகவும், இதில் விருப்பமில்லாத சரண்யா தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு  கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்