600 அப்பாவி இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்: இளம்பெண்ணின் துணிச்சலான செயல்; அதிர்ந்துபோன பொலிஸார்!

320shares

லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, 600 அப்பாவி இளம்பெண்களை, நிர்வாணமாக்கி, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சென்னை சாப்ட்வேர் என்ஜினியரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹைதராபாத் இளம்பெண் அளித்த துணிச்சலான புகார், கேடுகெட்ட செயலை அரங்கேற்றி வந்த சாப்ட்வேர் என்ஜினியரை ஆந்திர பொலிசாரிடம் சிக்க வைத்திருக்கிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின், ஹைட்டெக் சிட்டியான, ((HiTech City)) சைபராபாத்திற்குட்பட்ட ((Cyberabad)) பகுதி மியாப்பூர்.((Miyapur)). இங்குள்ள காவல்நிலையத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில், இளம்பெண் ஒருவர், புகார் அளித்துள்ளார்.

அதில், பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கித் தருவதாக கூறி, தனது நிர்வாண படத்தை வைத்து, ஒருவர், தன்னை மிரட்டுவதாகவும், அவர் சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறி, தனது வாட்ஸ் ஆப் உரையாடலையும், அந்த நபரின் செல்போன் எண்கள் உள்ளிட்ட தகவல்களையும் அளித்துள்ளார்.

இதையடுத்து, சைபர் கிரைம் பொலிஸார் உதவியுடன், கடந்த 4 மாதங்களாக, இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய நபரை தேடிவந்த, தெலங்கானா பொலிசார், அந்த நபரை, சென்னையில் வைத்து கைது செய்திருக்கின்றனர்.

தொடர்ந்து விசாரணையில் அவனது செல்போன் மற்றும் கணிப்பொறியை ஆராய்ந்தபோது, பொலிசார் அதிர்ந்து போயுள்ளனர், கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் நிர்வாண வீடியோக்கள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாண புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே பொலிசார் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அவனிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக அறியமுடிகிறது

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்