கனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம் - கதறும் உறவுகள்!

749shares

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பனர் மேலே விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்த பெண், தண்ணீர் லொறியில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அந்த சாலையின் நடுவில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக அதிமுக பிரமுகர் சார்பில் பனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது தண்ணீர் லொறி ஒன்று ஏறி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது சுபஸ்ரீக்கு இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சாலைகளின் நடுவே பனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், பனரால் ஒருபெண் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில் இலங்கையிலும் கோட்டாபய ராஜபக்சவுக்காக வைக்கப்பட்டிருந்த பனர் விழுந்து சிலர் காயமடைந்ததுடன் வாகனங்கள் சிலவும் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி