சோகத்தில் ஆழ்த்திய இளம்பெண்ணின் மரணம்: விஜய், சூர்யா, சிம்பு மற்றும் அஜித் ரசிகர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு; பாராட்டும் மக்கள்!

545shares

சட்ட விரோதமாக வைக்கப்படும் பதாதைகளால் (கட்டவுட்) இதுவரை தமிழகத்தில் பலர் பலியாகியுள்ளனர், அந்த வகையில் சில நாட்களுக்கு முன் பதாதை விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியாகினர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியதையடுத்து பலர் பதாதைகள் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் விஜய், சூர்யா, அவர்களது படங்கள் வரும்போது சட்டவிரோதமான முறையில் பாதைகள் வைக்க வேண்டாமென ரசிகர்களை அறிவுறுத்தியுள்ளனர், அதே முடிவில்தான் அஜித் ரசிகர்களும் உள்ளனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பதாதைகள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் `பிகில்' படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி நடக்கவுள்ளது.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக் கூடாது என நிர்வாகிகள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார் விஜய். பேனர் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இதனிடையே மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அதில்,`சுபஸ்ரீ என்கிற சகோதரியின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்பு நாம் சிந்தித்து செயல்படத் தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறது.

இனிமேலாவது சிந்தித்துச் செயல்படுவோம். அந்தச் சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அஜித் படங்களுக்கு அவர் புகழைப்பரப்பும் விதமாக இனி பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் காப்பான் திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ``அனைவருக்கும் கவலையளிக்கும் விதமாக ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. படம் வெளியாகும்போது ரசிகர்கள் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ரசிகர்கள் செய்யும் ரத்த தானம் உள்ளிட்ட விஷயங்களைக் கவனித்து வருகிறேன். பேனர் வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள் அந்தத்தொகையைக் கல்விக்குச் செலவிடுங்கள்'' என்றார்.

முன்னணி நடிகரான சிலம்பரசனும் பதாதைகள் வைக்கவேண்டாம் என தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்