மன விரக்தியால் முன்னாள் சபாநாயகர் தற்கொலை!

76shares

ஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோடேலா சிவபிரசாத ராவ், ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (16) பிற்பகல் காலமானார்.

ஹைதராபாதில் உள்ள தனது இல்லத்தில் அவர் தூக்குப் போட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இல்லத்தில் தூக்குப் போட்ட நிலையில் அவர் இன்று காலை குடும்பத்தினரால் மீட்கப்பட்டு, பன்ஜாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு வென்டிலேட்டர் கருவி வைத்து அவரை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்ததாகவும், ஆனால் பிற்பகல் 12.15 மணியளவில் கோடேலா சிவபிரசாத ராவ் உயிரிழந்து விட்டதாக தெரியவருகின்றது.

அதேநேரத்தில், சிவபிரசாத ராவ் மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அம்பாதி ராம்பாபுவிடம் அவர் தோல்வியடைந்தார்.

இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார். ஆந்திர சட்டப்பேரவையில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புடைய உபகரணங்களை திருடிச் சென்றதாக துல்லூர் காவல்நிலையத்தில் அண்மையில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்