மீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை! இதுதான் காரணமா? திண்டாடும் மக்கள்!

522shares

சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 336 ரூபாய் உயர்ந்து 29,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இந்த 10 மாதத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒரு சவரன் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது .

குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை 3 ஆயிரம் வரை அதிகரித்தது. அதாவது 27 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்தது.

நேற்று ஒரு பவுன் தங்கம் 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னையில் ஒரு பவுன் தங்கம் 29 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் 29 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது தங்கம் விலை. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.3 ஆயிரத்து 626 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவுதியில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் கிணறு மீது கிளர்ச்சி குழுக்கள் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் கிணறு பற்றி எரிந்து வருகிறது.

இந்த அச்சம் காரணமாக பலரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ததால் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இதனிடையே கிளர்ச்சி குழுக்கள் தொடர்ந்து இது போன்று தாக்குதல் நடத்த தொடங்கினால் பெரிய அளவில் பெட்ரோல் விலை உயரும் அபாயமும் உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்