விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை!

515shares

இராமநாதபுரத்தை சேர்ந்த அரு.சுப்பிரமணியன் என்ற இளைஞர் வைகோவை விமர்சித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த அரு.சுப்பிரமணியன் என்பவரை வைகோ கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்.

இதையடுத்து வைகோவுக்கு தனது எதிர்ப்பை பதுவு செய்யும் வகையில் அந்த இளைஞர் ஒட்டியுள்ள போஸ்டர் மதிமுக நிர்வாகிகளை கொதிப்படைய வைத்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக வைகோ போராடுவதை பார்த்து சுப்பிரமணியன் கடந்த 2012-ம் ஆண்டு மதிமுகவில் இணைந்தார்.

சுப்பிரமணியனுக்கு இளைஞரணியில் பொறுப்பு கொடுத்தார் வைகோ.

இந்நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் பேட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக சுப்பிரமணியன் செயல்படவில்லை என்றும், அமமுக வேட்பாளருடன் சுற்றிக்கொண்டிருந்தார் எனவும் தலைமைக்கு புகார்கள் பறந்துள்ளன.

இதையடுத்து இது தொடர்பாக வைகோவின் உதவியாளர் அருணகிரி, சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறபடுகிறது. இதையடுத்து மதிமுகவில் இருந்து அரு.சுப்பிரமணியன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இதைத் தான் நானும் எதிர்பார்த்தேன் என்கிற வகையில், அரு. சுப்பிரமணியன் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

அதில், கடனாளிஆக்காமல் கட்சியை விட்டு என்னை நீக்கியதற்கு வைகோவுக்கு நன்றி எனக் கூறி தலைவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்