அடுத்தடுத்து 6 பேரை கொலை செய்த பெண்; பின்னணி காரணத்தை அறிந்து அதிர்ந்துபோன பொலிஸார்!

581shares

உணவில் சயனைடு கலந்து கொடுத்து கணவரையும், அவரது குடும்பத்தையும் 14 ஆண்டுகளில் அடுத்தடுத்து தீர்த்துக் கட்டிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

கோழிக்கோடு மாவட்டம் கூடத்தை என்ற ஊரைச் சேர்ந்த அன்னம்மா என்பவர் 2002ஆம் ஆண்டில் உயிரிழந்தார். 6 ஆண்டுகள் கழித்து அவரது கணவரான டாம் தாமஸ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவர்களது மகனான ராய் தாமஸ், அன்னம்மாவின் சகோதரர் மாத்தீவ், சிலி என்ற இளம்பெண், அவரது ஒரு வயது குழந்தை என மரணப் பட்டியல் நீண்டது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடந்த உயிரிழப்பால், குடும்பத்தினர் யாருக்கும் சந்தேகம் எழவில்லை.

ஆனால் ராய் தாமஸின் மனைவியான ஜாலி, சிலி என்ற பெண்ணின் கணவர் சாஜூவை மணந்து கொண்டதுடன், குடும்பச் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. குற்றப்பிரிவு பொலிசாரை திணறடித்த இந்த வழக்கில் ஜாலியைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது திடுக்கிடும் தொடர் கொலைச் சம்பவத்தின் பின்னணிகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாஜூவை மணந்து கொள்வதற்காகவும், குடும்ப சொத்துக்காகவும் இவ்வளவு கொலைகள் செய்ததை 47 வயதான ஜாலி ஒப்புக் கொண்டார். இதை அடுத்து அவரையும், சாஜூ உள்ளிட்ட இருவரையும் பொலிசார் கைது செய்தனர். விசாரணையில், அனைவருக்கும் உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்ததை ஜாலி ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தென்னிந்திய மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.