காருக்குள் பிணமாக கிடந்த காதல்ஜோடி -கதறி துடிக்கும் பெற்றோர்

693shares

சேலத்தில் காருக்குள் காதலனுடன் பொறியியல் பீட மாணவி சடலமாக கிடந்தமை கண்டு பெற்றோர் கதறி துடிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சேலம் செவ்வாய்ப்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளிப்பட்டறை அதிபர் கோபி. இவரது மகன் சுரேஷ் (வயது 22). தந்தையுடன் சேர்ந்து வெள்ளி தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சுரேஷ் திடீரென மாயமானார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஒப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

பின்னர் நள்ளிரவில் ஜவுளிக்கடை பஸ் நிலையம் அருகே சுரேஷ் நடத்தி வரும் கார்ஷெட்டுக்கு சென்று தேடினர். அப்போது சுரேசின் மோட்டார் சைக்கிள் கார் செட்டின் முன் பகுதியில் நின்றது. மேலும் அவரது காரும் கார் ஷெட்டிற்குள் நின்றது.

உடனே அவர்கள் ஓடோடி சென்று பார்த்த போது காரின் பின் இருக்கையில் சுரேசும், ஒரு இளம்பெண்ணும் பிணமாக கிடந்தனர். மேலும் அவர்களது ஆடைகள் கழற்றப்பட்ட நிலையில் அரை நிர்வாணமாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர்.

தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம்பாள் மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுரேசுடன் பிணமாக கிடந்தது சேலம் குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தபொறியியல் பீட 3-ம் ஆண்டு மாணவியான ஜோதிகா (20) என்பது தெரிய வந்தது. மேலும் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

வெள்ளி பட்டறை அதிபரான சுரேஷ் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜோதிகாவின் தந்தையும் வெள்ளி தொழில் மற்றும் துணி வியாபாரமும் செய்து வருகிறார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ், ஜோதிகாவுக்கு செல்போனில் இருந்து ஒரு காதல் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதனை அறிந்த ஜோதிகாவின் பெற்றோர் இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதையும் மீறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும், தனிமையில் பேசியும், காதலை வளர்த்து வந்தனர்.

இதற்கிடையே ஜோதிகா வீட்டில் அவரை வெளியில் செல்லக்கூடாது என்று தடை விதித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். மேலும் காதல் ஜோடி நம்மை வாழவிடாமல் பிரித்து விடுவார்களோ? என்று அஞ்சினர்.

இந்தநிலையில் காருக்குள் பெட்ஷீட் விரித்த நிலையில் கிடந்ததாலும், காதல் ஜோடி அரை குறை ஆடையுடன் கிடந்ததாலும் அவர்கள் சாவதற்கு முன்பு உல்லாசமாக இருந்தாகவும், பின்னர் சயனைடு தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

காருக்குள் பாதி சாப்பிட்ட நிலையில் சாக்லேட் சிதறி கிடந்ததால் அதற்குள் வைத்து சயனைடு சாப்பிட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் காதல் ஜோடியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் அவர்கள் எப்படி இறந்தனர் என்பது உறுதி செய்யப்படும் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...