கடன் பிரச்சனை காரணமாக தமிழ் குடும்பமொன்று எடுத்த விபரீத முடிவு; 4 பேர் பரிதாப பலி!

472shares

கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகம் திருவள்ளூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

ஆவடி அடுத்த அன்னனூரில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான கோவிந்தசாமிக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும், நாகராஜ், ரவி என்ற 2 மகன்களும், கல்யாணி என்ற மகளும் உள்ளனர். கல்யாணிக்கு திருமணமாகி சர்வேஸ்வரி, யோகேஸ்வரி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கோவிந்தசாமி தனது மனைவி, மகன்ககளுடன் விஷம் அருந்தினார். இதில் கோவிந்தசாமி,சுப்பம்மாள், மகன்கள் நாகராஜ், ரவி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மகள் கல்யாணி மற்றும் அவரது 2 மகள்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான விசாரணையில் கல்யாணி தனது சகோதரர்களுக்கு பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார் என்றும், பணத்தை கேட்டு கல்யாணி தொல்லை கொடுத்துள்ளதால் மனவேதனை அடைந்த கோவிந்தசாமி உள்ளிட்ட அனைவரும் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சு மருந்தை உணவில் கலந்து சாப்பிட்டதும் தெரிய வந்துள்ளது.

"உங்களோடு நானும் குழந்தைகளோடு மருந்து குடித்து செத்துபோகிறேன்" என்று கல்யாணியும் விஷம் அருந்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...