ஆயிரம் பசுக்கள் மாயம் : அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட அரச அதிகாரிகள்!

43shares

ஆயிரம் பசுக்களை காணவில்லையெனத் தெரிவித்து அரச அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

அந்த மாநிலத்தின் மகராஞ்கஞ்ச் என்ற மாவட்டத்தில் உள்ள மத்வாலியா பகுதியில் சுமார் 2500 மாடுகள் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அங்கு அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் 954 பசுக்கள் மட்டுமே இருந்ததைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாநில தலைமை அமைச்சர் திவாரி மற்ற பசுக்கள் எங்கே என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பசுக்கள் காணமல் போனது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அமர்நாத் உபாத்யா, 2 உதவி ஆட்சியர்கள் மற்றும் கால்நடைத்துறை அதிகாரி உபாத்யா ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!