பல நாட்களாக பூட்டியிருந்த வீடு; கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சோகம்!

1751shares

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சோக சம்பவம் தமிழகம் விழுப்புரம் அருகே இடம்பெற்றுள்ளது

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விழுப்புரம் குயிலாப்பாளையம் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வரும் சுந்தரமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்ற உறவினர்கள், 3 நாட்களாக அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் நேரில் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, 3 நாட்களாகவே வீடு பூட்டி இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறியதையடுத்து சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுந்தரமூர்த்தி தூக்கில் தொங்கியவாறும், அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் கீழே தரையிலும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து தகவலளித்ததன் பேரில் விரைந்து வந்த பொலிசார், சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சுந்தரமூர்த்தி நடத்தி வந்த சீட்டு நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!