பெண்ணுக்கு கணவன் செய்த கொடூரம்; பின்னணியில் அதிர்ச்சி காரணம்; தமிழர் பகுதியில் பெரும் சோகம்!

1043shares

செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

கோணங்கிபாளையத்தை சேர்ந்தவர் சித்தன். சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ள இவர், தனது மனைவி ஈஸ்வரியிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். அப்போதெல்லாம் இருவரும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், நேற்றிரவும் வழக்கம் போல வாய் தகராறு ஏற்பட்டு முற்றியுள்ளது.

அப்போது ஆத்திரம் அடைந்த சித்தன் அரிவாளால் மனைவி ஈஸ்வரியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட, பயந்து போன சித்தன் பூச்சி மருந்தை அருந்தி சோளக்காட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மேலும் அறியமுடிகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிசார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு