தந்தையை கொலை செய்துவிட்டு தமிழ் இளைஞன் செய்த செயல்; பின்னணியில் இதுதான் காரணமாம்!

401shares

தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகம் கரூர் அருகே இடம்பெற்றுள்ளது

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,

பரமத்தி அடுத்த நொய்யல் குறுக்குச்சாலையைச் சேர்ந்த ரங்கசாமி, ரியல் எஸ்டேட் மற்றும் பாக்கு மட்டை தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர், நேற்று முன்தினம் (6) காலை குப்பம் அருகே சாலையில் காருடன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து பரமத்தி பொலிசார் விசாரணை நடத்தியதில், ரங்கசாமியின் மனைவி கவிதாவும் அவரது மகன் குமாரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இருவரையும் பரமத்தி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் ரங்கசாமி, கவிதாவை அடித்ததாகவும், அதை பார்த்த மகன் அஸ்வின் குமார் கோபத்தில் தந்தையை கீழே தள்ளிவிட்டு துண்டை போட்டு கழுத்தை நெறித்ததாகவும் இதில் ரங்கசாமி இறந்துவிடவே உடலை காரில் எடுத்துச் சென்று குப்பம் அருகே சாலையில் வைத்து காருடன் தீயிட்டு எரித்ததாகவும் தாய், மகன் ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் பரமத்தி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க