பிள்ளைகள் வெளிநாட்டில்: மனைவி இறந்த சில மணி நேரத்திலே கணவன் உயிரிழப்பு; தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்!

1055shares

மனைவி இறந்த சில மணி நேரத்திலே அவரது கணவரும் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,

ஆலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் காசி - சரோஜா தம்பதியினர். இந்த தம்பதிகளின் 3 பெண் குழந்தைகள் திருமணம் முடிந்து வெளியூர்களில் உள்ள நிலையில், அவரது 2 மகன்களும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வயது முதிர்வு காரணமாக சரோஜா திடீரென உயிரிழந்தார். இவர் உயிரிழந்த சிறிது நேரத்தில் காசியும் உயிரிழந்துள்ளார்.

மனைவியை இழந்த அதிர்ச்சியிலே காசியும் உயிரிழந்துவிட்டதாக கிராம மக்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த தம்பதிகளின் இறுதி சடங்கு இன்று (8) ஆலம்பட்டு கிராமத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க