ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணத்தை நடத்தவுள்ள தாய்!

148shares

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரேநாளில் திருமணம் நடத்திவைக்கவுள்ளார் அவர்களைப் பெற்றெடுத்த தாய்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பொத்தன்கோடு நானுட்டுகாவு என்ற கிராமத்தில் கடந்த 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி பிரேம்குமார்- ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை என 5 குழந்தைகள் பிறந்தன. .இந்த குழந்தைகள் ஒரே ராசியில் உத்ர நட்சத்திரத்தில் பிறந்ததால் தனது குழந்தைகளுகு்கு உத்ரஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா மற்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் எனப் பெயர் வைத்தார். மேலும் தனது வீட்டின் பெயரையும் பஞ்ச ரத்னம் என மாற்றினார்.

இவர்கள் 4 பேரும் ஒரே மாதிரி வளர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த குழந்தைகளுக்கு 9 வயதாக இருக்கும்போது ப்ரேம் குமாருக்கு ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

5 குழந்தைகளைப் பெற்ற தந்தை தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் செய்து அறியாது திண்டாடினர். இந்நிலையில் கேரள மாநில அரசு அவருக்குக் கூட்டுறவு வங்கியில் பணி வழங்கியது.

அதன் பின் தன் கடும் உழைப்பால் தனது 5 குழந்தைகளையும் வளர்த்தார் பூமாதேவி தற்போது உத்ரா பேஷன் டிசைனராகவும், உத்தரஜா, உத்தம்மா ஆகியோர் மயக்கவியல் மருத்துவராகவும், உத்தாரா பத்திரிகையாளராகவும், பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் 4 பேருக்கும் திருமணம் செய்ய வைக்க மாப்பிள்ளை பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 4 பேருக்கும் தகுந்த மாப்பிள்ளைகள் கிடைத்துவிட்ட நிலையில் இவர்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதற்கான ஏற்பாடுகளை இந்த நான்குபேருடன் உடன் பிறந்த உத்ராஜன் செய்து வருகிறார். ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே மணமேடையில் திருமணம் நடக்கவுள்ளது தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது மகனும் இவர்களுடன் சேர்ந்து பிறந்திருந்தாலும் அவர் சாதிக்க வேண்டி உள்ளதால் பின்னரேயே அவருக்கு திருமணம் நடத்தபடும் என தாயார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்