கடன் தொல்லையால் தமிழ் தம்பதி எடுத்த விபரீதமான முடிவு! துயரத்தில் உறவுகள்

267shares

கடன் தொல்லை தாங்க முடியாமல் தமிழ் தம்பதி எடுத்த விபரீத முடிவால் பெற்ற பிள்ளைகள் உட்பட கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சென்னையைச் சேர்ந்த சந்திரன் (வயது 64) அவரது மனைவி விஜயலட்சுமி (60) இருவரும் நேற்றுமுன்தினம் தமது வீட்டில் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற் கொலை செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தியபோது, சந்திரன் தனது மகன், மகள் மற்றும் பொலிசாருக்கு தனித்தனியாக கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில், “நான் வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டுமே மாதா மாதம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக கொடுத்து வந்தேன். தொடர்ந்து வட்டியும், அசலையும் கொடுக்க முடியாத விரக்தியில் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள், எங்கள் மகன் மற்றும் மகளிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்க வேண்டாம்” என எழுதி இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

இதையும் தவறாமல் படிங்க