சுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்!

807shares
Image

அதிமுக கட்சி கொடி கம்பம் சரிந்து விழுந்த போது அதைத் தவிர்ப்பதற்காக விரேக் போட்டதில் வண்டி சறுக்கி கீழே விழுந்து பெண் காயமடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகம் கோவை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று (12) காலை பணிக்கு செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அவர் கோல்டுவின்ஸ் பகுதி வழியே செல்லும்போது எதிர்பாராதவிதமாக அதிமுக கட்சி கொடி கம்பம் சரிந்து விழுந்துள்ளது. அதைத் தவிர்ப்பதற்காக அவர் திடீரென விரேக் போட்டதில் வண்டி சறுக்கி கீழே விழுந்தவுடன், அந்த வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறியதாக கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள அதிமுக கட்சி பிரமுகர் ஒருவரின் இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கட்சி கொடி கம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன.

அந்த கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்கு காரணமெனவும், அதனை காவல் துறையினர் மறைப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிமுக கொடிக் கம்பம் மோதியதில்தான் விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த செப்ரெம்பர் மாதம் துரைப்பாக்கம்-பல்லாவரம் சாலையில் அதிமுக பிரமுகர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு வரும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்று டிஜிடல் வெனர்களை வைத்திருந்தார்.

முன்னாள் கவுன்சிலரும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான சி. ஜெயகோபால் வைத்த அந்த வெனர் சரியாக கட்டப்படாததால், பள்ளிக்கரணை சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த சுபஸ்ரீ மீது அது விழுந்தது. சுபஸ்ரீ நிலைதடுமாறிய போது, அவரது வண்டியின் பின்புறம் வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி அவர்மீது எறியதில் அவர் பலியானார்.

இச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ராஜேஸ்வரி படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!