குடியிருப்பு தொகுதி சுவர் இடிந்து வீழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் பரிதாப மரணம்!

15shares

தற்போது தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக வீடுகளின்சுவர்கள் இடிந்து விழுந்ததில் உறக்கத்திலிருந்த 17 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதி குடியிருப்பிலேயே இந்த பரிதாபகர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக குறித்த கொலனியில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் வீட்டு சுவர்கள் கடும் ஈரலிப்பை அடைந்தன.இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் நான்கு வீடுகளின் சுவர்கள் இடிந்து வீழ்ந்தன. இதில் உறக்கத்திலிருந்த 17 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.அத்துடன் சம்பவ இடத்தில் காயமடைந்தவர்கள் மிட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...