வலையில் சிக்கிய பொருளால் அதிர்ச்சியில் உறைந்துள்ள மீனவர்கள்!

21shares

மீன் பிடிக்கச் சென்ற மீனவரின் வலையில் ரொக்கெட்டின் பாகம் ஒன்று சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தார்.அப்போது வலையில் ஏதோ கடினமான பொருள் சிக்கியிருப்பதை உணர்ந்த அவர் அதுகுறித்து சக மீனவர்களுக்கு தெரிவிக்க மூன்று படகுகள் இணைந்து அந்த பொருளை கரைக்கு இழுத்து வந்திருக்கின்றன. ஜேசிபி உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்ட அந்த பொருள் ஒரு ரொக்கெட்டின் பகுதியாகும்.

ரொக்கெட்டின் பாகம் வலையில் சிக்கியது மீனவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் கிடைத்த ரொக்கெட்டின் பாகம் குறித்து ஆய்வு செய்ய விண்வெளி ஆய்வு மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...