கன்னியாஸ்திரிகள் -பாதிரியார் இடையே உள்ள இரகசிய உறவு ! அம்பலப்படுத்தவுள்ளார் மற்றுமொரு கன்னியாஸ்திரி

441shares

கன்னியாஸ்திரிகளுக்கும், தேவாலய பாதிரியார்களுக்கும் இடையே இருக்கும் இரகசிய உறவுகள் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து கன்னியாஸ்திரி லூசி கலபுரா புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பாலியல் புகாருக்கு உள்ளான கிறிஸ்தவ பிஷப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா, கத்தோலிக்க தேவாலய தலைவர்கள் மீது அதிரடியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தரில் கத்தோலிக்க ஆயராக இருந்த பிராங்கோ முல்லக்கல் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரளாவில் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து பிராங்கோ கைது செய்யப்பட்டார். பிஷப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா, விதிகளுக்கு முரணாக கவிதை மற்றும் புத்தகங்கள் எழுதியதாக கத்தோலிக்க சபையில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் லூசி கலபுரா, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக பேசி வந்த கத்தோலிக்க தேவாலய தலைவர்கள், தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.

சபை சார்பில் தமக்கு மனதளவில் பல்வேறு கொடுமைகளை இழைக்கப்பட்டதால்தான் புத்தகம் எழுதத் தொடங்கியதாகவும், என்ன நடந்தாலும், வரும் 10 ஆம் திகதி அந்தப் புத்தகத்தை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!