கடவுச்சீட்டில் தாமரைச் சின்னம்! வெளியான கடும் சர்ச்சைக்கு விளக்கம்

304shares

இந்தியாவில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்களில் தாமரைச் சின்னம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய கடவுச்சீட்டுகளில் தாமரை சின்னம் அச்சிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகள் மக்களவையில் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இது தொடர்பாக கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இது குறித்து வெளியுறவுச் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.

“ பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாமரை சின்னம் நமது நாட்டு தேசிய மலர். அதேபோல், தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில், கடவுச்சீட்டில் இடம்பெறும்.

மேலும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டு நெறிகளின்படி இந்த பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்