இலங்கைத் தமிழர்களுக்கான இரட்டைக் குடியுரிமையில் இரட்டை வேடம்! வெளியானது தகவல்

232shares

இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாப் பொதுக் கூட்டம் விழுப்புரம் நகராட்சித் திடலில் நேற்று (20) இரவு நடைபெற்றது.

இதில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அதிமுகவின் எஞ்சியுள்ள ஓராண்டு ஆட்சி காலம் விரைவில் முடிந்துவிடும். அடுத்து திமுக ஆட்சி அமைப்பது உறுதி. அப்போது, அனைத்து குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் போராடி வரும் நிலையில், அதிமுக அரசு ஆதரிக்கிறது.

இது குறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பியபோது, தமிழகம் அமைதியாக உள்ளதாக ஆட்சியாளா்கள் பதிலளிக்கின்றனா்.

இந்த விவகாரத்தில் சிறுபான்மையினருக்கும், இலங்கைத் தமிழா்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்துள்ளன.

இப்போது, இலங்கை அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்குவதாக நாடகமாடத் தொடங்கியுள்ளனா். இந்திய, இலங்கை சட்டத்தில் அதற்கு வாய்ப்பே இல்லாத நிலையில், இரட்டை துரோகம் செய்கின்றனா்” என்றார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

loading...