டிரம்பிற்கு தெரியாமல் இருக்க மதில் கட்டும் இந்தியா!

181shares

அமெரிக்கா ஜனாதிபதி குடிசைகளை பார்க்ககூடாது என்பதற்காக குஜராத் அரசு மதில் எழுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா செல்லவுள்ள நிலையில் குஜராத்தின் குடிசை பகுதிகள் தெரியாது சுவர் எழுப்பி மறைக்கப்பட்டு வருகின்றன.

இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியானது.

இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு ட்ரம்ப் செல்ல உள்ளார்.

இந்நிலையில், அகமதாபாத்தின் இந்திரா பாலத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வரை உள்ள பகுதியில் வீதியுடன் சேர்த்து தடுப்புச் சுவர் கட்டும் பணியில் அகமதாபாத் மாநகரச சபை ஈடுபட்டுள்ளது. 6 முதல் 8 அடி உயரத்தில் எழுப்பப்படும் இந்த சுவர்கள் சாலையில் இருந்து குடிசை பகுதிகள் தெரியாத வண்ணம் கட்டப்படுகின்றன.

சுமார் அரை கிலோமீட்டர் நீளத்திற்கு கட்டப்படும் இந்த சுவர் அமையும் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இதேபோன்று 2017 ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவும் அவருடைய மனைவி அக்கி அபேவும் இந்தியா சென்றபோது இதே போன்று குஜராத்தை அழகாக்கும் பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மேயர் Bijal Patel, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது நான் அதைப் பார்த்ததில்லை, அதைப் பற்றி தெரியாது " என கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்