முதல் இடம் பிடித்து அசத்தியுள்ள தமிழ் மொழி! குவியும் பாராட்டுக்கள்

729shares

விக்கிப்பீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய கட்டுரை போட்டியில் அனைத்து இந்திய மொழிகளையும் வீழ்த்தி தமிழ் முதலிடம் பிடித்துள்ளது.

'வேங்கைத் திட்டம் 2.0' என்ற பெயரில் விக்கிப்பீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் 2020 ஜனவரி 10 வரை கட்டுரை போட்டி ஒன்றினை நடத்தியது.

இதில் ஒவ்வொரு மொழியினரும் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் 300 வார்த்தைகளுக்கு எழுத வேண்டும். நேரடியாக கூகிள் மொழிபெயர்ப்போ அல்லது இதர எந்திர மொழிபெயர்ப்போ பயன்படுத்தக் கூடாது என்பதே போட்டியின் விதி.

கடந்த ஆண்டு முதல்முறையாக நடந்த போட்டியில் பன்னிரண்டு மொழியினர் போட்டியிட்டனர். ஆனால் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாம் இடம் தான் பெற முடிந்தது. பஞ்சாபி மொழி முதலிடம் பிடித்தது. இது தமிழ் விக்கிப்பீடியா ஆர்வலர்களுக்கிடையே வருத்தத்தை அளித்தது.

இந்த நிலையில் தற்போது நடந்த போட்டியில் தமிழ் மொழியானது, இந்திய மொழிகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

போட்டிக்கான காலகட்டத்தில் அதிகபட்ச கட்டுரைகள் மட்டுமின்றி, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ் மொழி முதலிடத்தை பெற்றுள்ளது.

you may like this

Tags : #India
இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!